வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!

0
254
#image_title

வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மை!

காலை எழுந்தவுடன் எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும்.காலையில் எழுந்தவுடன் நாம் அனைவருமே டீ ,காபி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர தேனில் உள்ள விட்டமின், மினரல்ஸ், ஸ்லோகனைட்ஸ், என்சைம் ,போன்ற சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுகிறது.

மேலும் ஊறவைத்த பாதாம் இந்த பாதாமில் விட்டமின் இ, மெக்னீசியம், புரோட்டின், போன்ற சத்துக்கள் உள்ளது. அதனால் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

காலை வெறும் வயிற்றில் சாப்பிட மிகவும் உகந்த பழம் பப்பாளி பழம் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்றவைகளை சரி செய்ய உதவுகிறது. அதிகப்படியான நார்ச்சத்து எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

முளைகட்டிய பச்சைப்பயிறு அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான புரதம் சீரான தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

author avatar
Parthipan K