மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

0
71

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை எளிதில் குணமாகக்கூடும்.
இந்த மணத்தக்காளி கீரையை குழந்தைகள், இளைஞர்கள்,கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் உட்கொள்ளலாம்.

மணத்தக்காளிக் கீரையை குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடுவதால் குடல் புண்கள் எளிதில் குணமாகும். மேலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது.வெறும் கீரையாக உண்டாலே வாய்ப்புண் ஆறும்.ஆனால் இந்தக் கீரையில் சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் எளிதில் வாய்ப்புண் குணமடையும்.

வாய்ப்புண் உள்ள போது மணத்தக்காளி சீரகம்,காய்ந்த மிளகாய் சேர்ந்து எண்ணெயில் வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைத்த பிறகு அதில் மேலும் தேங்காய் பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் எளிதில் குணமாகும்.காய்,கீரை வகைகளை பொதுவாகவே உணவில் சேர்த்து கொண்டால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெரும்.மேலும் கீரையுடன் 4 ஸ்பூன் பார்லி, 4 சிட்டிகை மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி கீரையை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவதால் நோய்கள் விரைவில் குணமடையும்

author avatar
Parthipan K