தமிழக அரசின் “அம்மா கோவிட் ஹோம் கேர்” திட்டத்தின் சிறப்பம்சங்கள்:! மக்களே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

0
58

இந்தியாவில் மும்பையை அடுத்ததாக சென்னையில்தான் அதிக கொரோனாத் தொற்று பாதிப்படைந்தவர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னையை பொருத்தவரையில் சில மாதங்களாக தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறி,தீவிர அறிகுறி என பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இவை தவிர அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் , லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

வீட்டு தனிமையில் (ஹவுஸ் கோரன்டைன்)
இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அம்மா திட்டத்தின் படி “கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம்”(covid home care) எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு அடுத்தவாரம் அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் தொற்று அறிகுறி தென்பட்டு வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.இந்த 20 பேர் கொண்ட குழுவில் மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் யோகா மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், உள்ளிட்ட குழுக்களாக செயல்படுவர்.மேலும் இந்த 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு முழு மருத்துவ உதவிகளையும் வீடு சென்று வழங்குவார்கள்.

மேலும் அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு மருத்துவப் பெட்டகம் வழங்கப்படும்.அதில் விட்டமின் மாத்திரைகள், முகக் கவசங்கள்,ஆக்சி மீட்டர் கருவிகள்,தெர்மல் ஸ்கேனர்,கபசுர குடிநீர்,எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள்,சோப்பு உள்ளிட்டவை அந்தப் பெட்டிக்குள் இருக்கும்.

மருந்துச் சீட்டுகள் ஆன்லைன் மூலமும் மருத்துவ ஆலோசனைகள் காணொலி காட்சி மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.இத்துடன் கூடவே யோகா பயிற்சியும் வழங்கப்படும் இத்திட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பர்.அப்பொழுது அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வளவு வசதிகள் உள்ளடக்கிய இந்த திட்டத்தில் சேர்வோர்களுக்கு கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் ஒரு கண்டிஷன் என்னவென்றால் ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு விட்டு தனிமையில் இருக்க தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.அதாவது லேசான அறிகுறிகள் உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேரமுடியும்.இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 14 நாட்கள் சிகிச்சை தொகுப்பிற்காக ரூ 2500 வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகின்றது.

author avatar
Pavithra