விரைவில் நடைபெறவிருக்கும் எதிர்கட்சி முதல்வர்களின் சந்திப்பு கூட்டம்! பிரதமராகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

0
51

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசி மூலமாக உரையாற்றியிருக்கிறார்.

அதாவது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார் என்றால் அது மிகையாகாது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும், ஒன்றாக படித்தவர்கள் என்றாலும் கூட அரசியல் ரீதியாக அவர்கள் இருவரும் வெவ்வேறு துருவங்களாகவே பயணம் செய்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்ற விதத்தில் தேசிய அளவில் குரலெழும்ப தொடங்கியது. இது பிரதமர் நரேந்திர மோடிக்கு சற்று மனக்கலக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசியது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, மம்தா பானர்ஜி என்னை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறி எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும், அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தும் போக்கை கண்டிக்கும் விதமாகவும், தன்னுடைய கவலையையும், ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார் என தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றிணைந்து சந்திக்கலாம் என்றும், அவர் பரிந்துரை செய்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திமுகவின் உறுதியினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்பு கூட்டம் மிக விரைவில் டெல்லிக்கு வெளியே நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் இந்த சந்திப்பு நடைபெற்றவுடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியின் தலைவர் மற்றும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முடிவுகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

அவ்வாறு வெளியாகும் முடிவின் நீட்சியாக முதல்வர் ஸ்டாலின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அல்லாத கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது என்றும், ஒரு சில செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

அதேநேரம் வட இந்தியாவைப் பொறுத்த வரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. அதே போல முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போதுமான செல்வாக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனாலும் கூட்டணி கட்சிகளின் தயவால் அவர் பிரதமராவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.