திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை!

0
70

திருச்சி பெல் ஆலை வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை!

திருச்சி பெல் ஆலை வளாக கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி லலிதா ஜுவல்லரியில் சமீபத்தில் கோடிக்கணக்கான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி பெல் ஆலையின் வங்கியில் ரூபாய் 1.5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பெல் ஊழியர்களுக்கு அமைக்கப்பட்ட இந்த வங்கியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். முழுக்க முழுக்க ஆலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் கடுமையான சோதனைகள் செய்யப்படும். இந்த வங்கியில் இருந்து ஒரு குண்டூசியை கூட வெளியே எடுத்து செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில், ஒன்றரை கோடி ரூபாய் எப்படி கொள்ளை போனது என்ற ஆச்சரியத்தில் அனைவரும் உள்ளனர்

இந்த வங்கியின் பின்புறத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இருந்துதான் கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து கொள்ள அடித்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது

மேலும் ஒவ்வொரு நாளும் இந்த வங்கியில் சேரும் பணத்தை வங்கியில் உள்ள பணப்பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் நேற்று சேர்ந்த பணத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்காமல் வெளியிலேயே வைத்து விட்டு, நாளை காலை வந்த பிறகு பணத்தை பெட்டகத்தில் வைத்து கொள்ளலாம் என்று கவனக்குறைவாக ஊழியர்கள் சென்றதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன
இந்த நிலையில் இதுவரை நடந்த விசாரணையின் படி வங்கி சுவற்றில் துளை போடவோ அல்லது வங்கிக்கதவுகள் உடைக்கப்பட்டதாகவோ செய்திகள் வரவில்லை. எனவே வங்கி கதவுகள் திறக்கப்பட்டு தான் கொள்ளையடிக்கப்பட்ட இருக்கலாம் என்றும் அப்படி என்றால் இந்த கொலையில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
CineDesk