நம்புங்க! நான் ஒரு டாக்டர் என்று சொன்ன திருநங்கை! அதிரடியாக முடிவெடுத்த ஆய்வாளர்!

0
71

மதுரை மாவட்டத்தில் ரோடு ரோடாக பிச்சை எடுத்த திருநங்கை டாக்டர் என தெரிந்ததும் தனது சொந்த செலவில் கிளினிக்கை அமைத்துக் கொடுத்த ஆய்வாளர் கவிதா அவர்களின் செயல் பாராட்டப்பட்டு சமூக வலைதளங்களில் மிக பரபரப்பாக பேசப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் திலகர் திடல் எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ரோடு ரோடாக சுற்றி திரிந்த திருநங்கையை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணை செய்த பொழுது அந்த திருநங்கை நான் ஒரு டாக்டர் என்று கூறியிருக்கிறார். ஒரு திருநங்கை டாக்டர் என்பதை நம்ப மறுத்த காவல்துறையினர் விசாரணைக்காக ஆய்வாளர் கவிதாவிடம் திருநங்கையை ஒப்படைத்துள்ளனர்.

அப்பொழுது ஆய்வாளர் கவிதாவிடமும் நான் ஒரு டாக்டர் என்பதை அந்த திருநங்கை தெரிவித்துள்ளார். உடனே ஆய்வாளர் நான் எப்படி அதை நம்புவது என்று கேட்டுள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதையும் கவிதா கேட்டுள்ளார்.

அந்த திருநங்கை உடனே தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு போனில் அழைத்து தனது சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்து வரச் சொல்லியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து திருநங்கையின் நண்பர் சான்றிதழ்களை எடுத்து வரவே சான்றிதழ்களை சரிபார்த்து ஆய்வாளர் கவிதா மிகவும் அதிர்ந்து போயுள்ளார். இவ்வளவு திறமை இருந்தும், டாக்டருக்கு படித்து ஏன் ரோடு ரோடாக பிச்சை எடுக்க வேண்டும் என்ற திருநங்கையிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த திருநங்கை இந்த சான்றிதழ்களை வாங்குவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் சமுதாயத்தின் பார்வையால் நான் நிராகரிக்கப்பட்டேன். அதனால் வேறு வழியில்லாமல் ரோடு ரோடாக பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

திருநங்கையின் கதையை கேட்ட ஆய்வாளர் கவிதா மனமுருகி உடனடியாக தனது மேல் அதிகாரிகளிடம் பேசி தனியாக அவருக்கு கிளினிக் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார் மேலும் தனது சொந்த செலவிலேயே மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் வாங்கி தந்துள்ளார்.

திருநங்கை ஒரு டாக்டர் பணியை செய்ய தொடங்கி இருப்பதும், அதே போல் அந்த செயல் செய்வதற்கு ஆய்வாளர் கவிதா மிகவும் உறுதுணையாக இருந்தார், என்பதும் சமூக வலைதளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

author avatar
Kowsalya