இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!

0
113
#image_title
இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ரூபாயை இழந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று இன்றைய காலக்கட்டத்தில் பலரும் பல்வேறு விதமாக வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு இன்ஸ்டாகிராமில் அதிக லைக், கமெண்ட்ஸ் வாங்கி பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் 15000 ருபாயை இழந்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் வர்ணிகா பிரயாக் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு மணப்பெண் போல உடை அணிந்து சொகுசு கார் முன் அமர்ந்து பிரபல பாடல் ஒன்றிற்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று நடனமாடி வீடியோ எடுத்து அதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி அதிக லைக், கமெண்ட், ஷேர் பெற்றது. இதனால் வீடியோ வைரலாகி அதுவே இளம்பெண்ணிற்கு பெரும் சோதனையை கொடுத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் போக்குவரத்து காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து காவல் துறையினர் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
வைரலான வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் அடையாள எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரத்தை கண்டறிந்து வீதிகளில் முக்கிய சாலைகளில் நடனமாடி வீடியோவாக பதிவு செய்த குற்றத்திற்காக அந்த இளம்பெண்ணுக்கு போக்குவரத்து காவல் துறையினர் 15500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இந்த மாதிரி செய்யக் கூடாது என்று அந்த இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.