கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்!

0
114
Beauties killed in car accident Upside down vehicle!
Beauties killed in car accident Upside down vehicle!

கார் விபத்தில் அழகிகள் பரிதாப பலி! தலைக்குப்புற கவிழ்ந்த வாகனம்!

தற்போது உள்ள அவசர உலகில் அங்கங்கே விபத்துக்கள் ஏற்படுவது மிகவும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் உயிரிழப்புகளை தான் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு அவசரம் எதற்கு? சற்று மெதுவாகத்தான் பயணம் செய்தால் என்ன? அந்த விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலிகளும் மிகவும் அதிக அளவில் உள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை நேரத்தில் வைற்றிலா  என்ற இடத்தில் கார் ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது எதேச்சையாக மோதியது. ஆனால் இதில் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அதன் காரணமாக தலைகுப்புற கவிழ்ந்து உருண்டும் போனது. இந்த காரில் இருந்த இரண்டு அழகிகள் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஷாஜன் இவர்கள் மற்றும் இவர்களது நண்பர்களும் பயணம் செய்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டிகளில் 26 வயதான ஆன்சி கபீர் மிஸ் கேரளா பட்டமும், 20 வயதான அஞ்சனா ஷாஜன் ரன்னர் அப்  பட்டமும் வென்றவர்கள். அவர்கள் இருவருமே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இதில் அன்சி கபீர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அட்டிங்கள் பகுதியை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.

மேலும் இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவரும் ஆவார். இவருக்கு மாடலிங்கில் முன் அனுபவம் இல்லை. ஆனால் அழகிப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர்களுடன் காரில்  பயணம் செய்த அவர்களது நண்பர்களான முகமது ஆசிப் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது வயது 30 மற்றும் 28 ஆகும். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வைற்றிலா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.