விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள ‘பீஸ்ட்’!

0
72

விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ள ‘பீஸ்ட்’!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘அரபிக்குத்து’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நடனமாடி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘பீஸ்ட்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20-ந் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த விழாவிலேயே பீஸ்ட் படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்க்ஷன் பணிகள் இதுவரை முடியவில்லை என்றும், அதற்கான இறுதி பணிகள் முடிவதற்கே இந்த மாதம் கடைசி ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாகவே, ‘பீஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K