சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடியால் நேர்ந்த பரிதாபம்!

0
56

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா என்கின்ற மாவட்டத்தில் ஆங்க்வாஹி என்கின்ற கிராம பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று நேற்றைய தினம் ஊருக்குள் நுழைந்துள்ளது. 

வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த அந்த ஒற்றை கரடி, அதன்கண் எதிரே தென் பட்ட கிராம மக்களை தாக்கியுள்ளது. அதில் ஏழு நபர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். 

அங்கு இருக்கும் பொதுமக்களின் பொருள்களையும் கரடி நாசம் செய்துள்ளது. கரடியின் இந்த கோர செயலால் படுகாயமடைந்த ஏழு நபர்களில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோர செயலால் அந்த கிராமத்தின் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அந்த கரடியை மயக்க ஊசி கொண்டு பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K