முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

0
57
இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு, கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றி, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார். இந்த நாள் (ஜூலை 26-ந் தேதி), கார்கில் போர் வெற்றி நாள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், கார்கிலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. எந்த சூழ்நிலையில் கார்கில் போர் நடந்தது என்பதை இந்தியர்களால் மறக்க முடியாது.
கொரோனாவை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாக நாம் ஒன்றுபட்டு போராடி, பல அச்சங்களை பொய்யாக்கி உள்ளோம். குணம் அடைபவர்கள் விகிதமும், பலியானோர் விகிதமும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. ஒருவர் உயிரிழப்பது கூட சோகமானதுதான். ஆனால், லட்சக்கணக் கான உயிர்களை நாம் காப்பாற்றி இருக்கிறோம்.
முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், 1 மீட்டர் இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கையை கழுவுவதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், முழு சுத்தத்தை கடைபிடித்தல் ஆகியவைதான் கொரோனாவிடம் இருந்து நம்மை காப்பாற்றும் ஆயுதங்கள் ஆகும். சிலர் முக கவசத்தை அசவுகரியமாக கருதுகிறார்கள். பிறருடன் உரையாடும்போது, முக கவசத்தை அகற்றிவிட விரும்புகிறார்கள். எப்போது முக கவசம் அவசியமோ, அப்போது அதை நீக்குகிறார்கள்.
எனவே, நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. மற்றவர்களையும் அப்படி இருக்க விடக்கூடாது. கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டும். ஒருபுறம், விழிப்புடன் கொரோனாவை எதிர்த்து போராடுவதுடன், மறுபுறம் நமது வேலைகளையும் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தேசிய பேரிடர் மீட்புப்படையும், சுய உதவிக்குழுக்களும் உதவி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
author avatar
Parthipan K