மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

0
101
Be careful people.. If you violate separate roads for bike cars, fine!! The action order flew to the Tamil Nadu government!!
Be careful people.. If you violate separate roads for bike cars, fine!! The action order flew to the Tamil Nadu government!!

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

அதிக விபத்துக்கள் நடக்கும் நகரமாக இருந்தாலும் சரி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் நகரமாக இருந்தாலும் சரி அதில் முதலாவதாக இருப்பது நமது சென்னை தான். இதையெல்லாம் தடுக்கவே அரசானது பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கனரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள், கார், பேருந்து போன்றவை தனித்தனியாக செல்வதற்கு என்று பாதைகள் அமைக்கப்பட்டது.

இதனால் அதிகளவு விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதை தவிர்த்து விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரிக்க தொடங்கியது. எனவே இதனை மீண்டும் அமல்படுத்தும்படி சென்னையை சேர்ந்த குமாரதாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, சென்னையில் மட்டும் ஒரு நாளில் கிட்டத்தட்ட 45 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றது. அதேசமயம் விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் மாநகரங்களில் சென்னை தான் முதலிடமாகவும் உள்ளது. சென்னை மாநகரத்தில் முன்பு, ஒவ்வொரு வாகனங்களுக்கென்று தனித்தனியாக இருந்த சாலை வசதியை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

அதேபோல அந்த விதிமுறையை மீறி வேறொரு மாற்று பாதையில் செல்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் விதிப்பு காரணமாகவே மக்கள் தங்கள் வாகனங்களுக்கு ஏற்ற பாதையில் சென்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்த விதிமுறையை மறந்து செயல்படுகின்றனர்.

இதனை மீண்டும் அமல்படுத்தும் படி போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையருக்கு கோரிக்கை கடிதம் எழுதினேன். அவர்களும் அந்த கடிதத்தை ஏற்று, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மற்றும் இணை கமிஷனருக்கு மீண்டும் முன்பு பின்பற்றியது போல தனித்தனி வாகனங்களுக்கான வழிப்பாதை முறையை அமல்படுத்துங்கள் எனக் கூறி கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் இதனை காவல்துறை சிறிதளவு கூட பொருட்படுத்தவில்லை. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல், விபத்து என அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே மீண்டும் அந்தந்த வாகனங்களுக்கான தனித்தனி வழிப்பாதை முறையை கொண்டு வர வேண்டும் என்று தற்பொழுது நீதிமன்றத்தை நாடி உள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், வரும் 22ஆம் தேதிக்குள் இதற்குரிய பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.