கர்ப்ப காலத்தில் எச்சரிக்கை வேண்டும்! அறிகுறிகள் தெரியும் முன்பே வைரஸ் பரவலாம்!

0
62

Corona இரண்டாவது அலையில் வளர்ச்சி அடைந்த குழந்தைகள் மட்டுமில்லாமல் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பாதிக்க படுகின்றனர்.

பிரசவத்தின் கடைசி வாரத்தில் corona தொற்று ஏற்படும் பொழுது, மன அழுத்தம் மற்றும் சரியான நேரத்தில் பரிசோதனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் பொழுது குறை பிரசவம் ஆகலாம். இது குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து பரவலாம். இல்லை தாயின் தொப்புள் கொடி மூலம் பரவலாம்.

எனவே எச்சரிக்கை உடன் செயல்படுவது நல்லது. பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக பதிப்பு ஏற்படுவதால் அம்மா அப்பா தவிர வேறு யாரும் அருகில் செல்ல வேண்டாம். அவர்களும் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

எனவே கர்ப்ப காலத்தில் சிறு அறிகுறிகள் இருந்தாலும் corona பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு குழந்தை பெற்ற ஒரு சில நாட்களிலேயே corona உறுதி செய்யபடுகிறது. இது எப்பொழுது வந்தது என தெரியவில்லை என்று சொல்லுவார்கள். கடந்த ஒரு சில வாரமாக அறிகுறிகள் தென்படும் முன்பே தொற்று பரவுகிறது. தாய்பால் கொடுப்பதன் மூலம் corona பரவுகிறது என்பதற்கான சான்றுகள் இல்லை. எனவே தாய்பால் கொடுப்பது தவிர்க்க கூடாது. முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

 

குறை பிரசவ குழந்தையைப் பொறுத்தவரை, நுரையீரல் முழு வளர்ச்சி அடைந்து இருக்காது. மூச்சு திணறல், செரிமான மண்டலம் கோளாறு, இதய கோளாறு இருப்பதும் இயல்பு. இதில் சில கொரோனா அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

 

முதல் அலை போன்று இல்லாமல் அறிகுறிகள் மாறுபடுகின்றன. முதல் அலையை விட இப்பொழுது தோலில் தடிப்பு, செரிமான கோளாறு, கண்களில் தொற்று வருகிறது.குறை பிரசவ கோளாறுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை செய்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாவிட்டால், கொரோனா பரிசோதனை அவசியம். டாக்டர் தீபா ஹரிஹரன் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் கூறியுள்ளார்.

 

 

 

author avatar
Kowsalya