பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா!

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா!

பரபரப்பான திருப்பத்துடன், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பின்னர் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீனிவாசன், முன்னாள் செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பிசிசிஐ தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் பெயரை என்.ஸ்ரீனிவாசன் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், அனுராக் தாக்கூர் முன்மொழிந்த சௌரவ் கங்குலி பெயர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இறுதிசெய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் படேலை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

“ஆம், பிரிஜேஷ் தலைவர் பதவிக்கு என் சீனிவாசன் உதவியுடன் போட்டியிட்டார். இருப்பினும், அவருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு இருந்தது. சவுரவ் புதிய தலைவராவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர். அவரது குரு ஜக்மோகன் டால்மியாவைப் போலவே அதிரடியான முடிவுகளை எடுப்பார்” என்று வடகிழக்கு பிரிவின் மூத்த பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமான் கெய்க்வாட், பி.சி.சி.ஐ.யின் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அப்பெக்ஸ் கவுன்சிலில் ஆண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக கீர்த்தி ஆசாத்தை தோற்கடித்தார். சாந்தா ரங்கசாமி முன்னதாக பெண் ஐ.சி.ஏ பிரதிநிதியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*