Connect with us

Breaking News

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

பூம்ரா பற்றி பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா உலகக்கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என தகவலகள் பரவி வந்தன.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். அது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப்போது பூம்ராவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் மையமாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்படுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறி இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் முழுவதுமாக விலகினார்.

Advertisement

இதையடுத்து பூம்ரா டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இன்னும் 6 மாத காலத்துக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கின.

ஆனால் பிசிசிஐ இதுபற்றி எந்த விதமான உறுதியான தகவலையும் வெளியிடாமல் மௌனம் காத்தது. இந்நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக பூம்ரா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. மேலும் அவருக்கு பதிலான மாற்று வீரர் யார் என்பதையும் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisement