ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ!

0
73

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்று வரையில் முதலிடத்தில் இருந்து வெற்றியடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். அவருடைய சொந்த கிராமத்தில் பொது மக்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற சோப்ரா அவர்களுக்கு பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது. அதோடு வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிக்குமார் ஒருவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

வெண்கல பதக்கம் வென்றெடுத்த பஜ்ரங் புனியா,லோவ்வினா, பிவி சிந்து உள்ளிட்டோருக்கு 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஒலிம்பிக் போட்டியில் 41 வருடங்களுக்குப் பின்னர் வெங்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு 1.25 கோடி பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.