மக்களே அலெர்ட்: 2023ம் ஆண்டில் இந்த தேதிகளில் எல்லாம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் !

0
105

பொதுவாக இந்தியாவில் வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை விடப்படும். அதுவே ஒரு மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் இருந்தால், ஐந்தாவது சனிக்கிழமையன்று வங்கி செயல்படும். இதனை தவிர்த்து சில முக்கியமான பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. வங்கிகளின் விடுமுறை நாட்களை தெரிந்துகொள்வதன் மூலம் நாம் அந்த நாட்களில் தேவையில்லாமல் வங்கிகளுக்கு சென்று அலைவதை தவிர்த்து கொள்ளலாம். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகள் தேசிய, வாராந்திர மற்றும் உள்ளூர் விடுமுறைகள் காரணமாக மூடப்பட்டிருக்கும். விடுமுறை நாட்களை மத்திய அரசு மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளது. சட்டத்தால் உள்ளடக்கப்பட்ட விடுமுறைகள், நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறைகள் மற்றும் வங்கிக் கணக்கு மூடல் விடுமுறைகள் ஆகியன. இப்போது 2023ம் ஆண்டில் வங்கிகளுக்கு எந்தெந்த தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இங்கே காண்போம்.

ஜனவரி 01: ஞாயிறு – புத்தாண்டு தினம்
ஜனவரி 12 வியாழன் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்)
ஜனவரி 15: ஞாயிறு- பொங்கல்
ஜனவரி 16: திங்கட்கிழமை – திருவள்ளுவர் தினம் / மாட்டுப் பொங்கல்
ஜனவரி 23: நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 26: வியாழன் – குடியரசு தினம்
மார்ச் 08: டோல்ஜாத்ரா ( மேற்கு வங்காளம்)
ஏப்ரல் 07: வெள்ளி – புனித வெள்ளி
ஏப்ரல் 14: வெள்ளி – தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14: வெள்ளி – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 22: சனிக்கிழமை – ரமலான்
மே 01: திங்கள் – மே தினம்
மே 05: வெள்ளி – புதன் பூர்ணிமா
மே 09: செவ்வாய்க்கிழமை – ரவீந்திரநாத் ஜெயந்தி (மேற்கு வங்கம்)
ஜூன் 29: வியாழன் – பக்ரீத் ( Id-ul-Azha)
ஆகஸ்ட் 15: செவ்வாய்க்கிழமை – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16: புதன்கிழமை – சட்டப் பரிமாற்ற நாள்
செப்டம்பர் 19: செவ்வாய்கிழமை – விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 28: வியாழன் – மிலாதுன் நபி (முஹம்மது நபி பிறந்த நாள்)
அக்டோபர் 02: திங்கள் – காந்தி ஜெயந்தி
அக்டோபர் 24: செவ்வாய் – விஜயதசமி
நவம்பர் 12 : ஞாயிறு – தீபாவளி
டிசம்பர் 25: திங்கட்கிழமை – கிறிஸ்துமஸ்

author avatar
Savitha