குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

குடியுரிமை சட்டம் எதிரொலி: வங்கதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தாக்கல் செய்த குடியுரிமை சீர்த்திருத்த மசோதா கடந்த திங்கள் அன்று மக்களவையிலும் நேற்று மாநிலங்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளிநாட்டிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

மேலும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வங்க தேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன் தமது இந்தியப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். அவர் நாளை முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

வங்கதேச இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற மசோதா காரணமாக அவர் திட்டமிட்டபடி இன்று டெல்லி வரவில்லை என்றும் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமனிடம் கேள்வி எழுப்பியபோது, ‘வங்கதேசத்தில் இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சட்டதிருத்தத்திற்கு அவர் நேரடியாக எவ்வித கண்டனங்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*