பிரசாந்த் கிஷோர் இடம் அடிபணிந்த ஸ்டாலின்! அதிருப்தியில் உதயநிதி!

0
60

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைதியாக இருக்க வில்லை என்றால் தேடுதலில் பின்னடைவு உண்டாகும் என்று ஆதாரத்துடன் பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததை அடுத்தே ஸ்டாலின், உதயநிதி புகைப்படத்தை போஸ்டரில் போட வேண்டாம் என்று தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் திமுகவின் தொண்டர்களுக்கு கலைஞர் வழியில் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் திமுக சார்பாக வைக்கப்படும் பதாகைகள், சுவரொட்டிகளில் கலைஞர்,அண்ணா, பெரியார், மற்றும் தன்னுடைய புகைப்படங்களை தவிர்த்து வேறு யாருடைய புகைப்படத்தையும் போடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் மூலமாக ,சமீபகாலமாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய புகைப்படத்தை பேனர் மற்றும் சுவரொட்டிகளில், பெரிதாக போட்டிருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுகவின் தொண்டர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என சொல்லப்பட்டிருக்கிறது .

உதயநிதி அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நேரத்தில், பிரசாந்த் கிஷோர் உடன் திமுக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் திமுகவுடன் தேர்தல் ஒப்பந்தத்திற்கு பிரசாந்த் கிஷோர் முன் வந்த நேரத்தில், வைத்த முக்கிய நிபந்தனைகள் குடும்ப உறுப்பினர்களை கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதுதான் .அதற்கு திமுகவின் தலைமை இசைவு அளித்திருந்தாலும், உதயநிதியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலவில்லை .

திமுக, மற்றும் பிரசாந்த் கிஷோர், இடையே ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து உதயநிதியின் செயல்பாடுகள் கட்சிக்கு இடையூறு செய்தது. ஆகவே பிரசாந்த் கிஷோர் சில கட்டுப்பாடுகளை உதயநிதிக்கு விதித்திருந்தார். இது உதயநிதிக்கு கோபத்தை ஏற்படுத்தவே, பிரபல வார இதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தலைமையில், தனக்கென்று ஒரு குழுவை அமர்த்திக்கொண்டார். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளின் படி தான் இப்பொழுது விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சியில் உதயநிதிஸ்டாலின் பங்கு பெற்று வருகின்றார்.

உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலினுக்கு கிடைக்கும் மரியாதை இவருக்கும் கிடைத்து வருகின்றது. அவரும் மிகவும் ஆர்வத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றார். திமுக ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற வேகத்துடன் உதயநிதி செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில் உதயநிதியின் சில கருத்துகள் எல்லை மீறு கின்றன என்பது ஸ்டாலினின் காதுக்கு எட்ட அதன்பிறகு தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஸ்டாலின் விதித்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.