இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

0
80

இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு இது குறித்து ஆய்வு நடத்தி புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய பொருளாக இருப்பது இந்த பூச்சிக்கொல்லி மருந்து தான் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தற்காலிகமாக இரு மாத காலத்திற்கு எளிதில் கிடைக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரபனோபாஸ் + சைபர்மெத்ரின், குளோரோபைரிபாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரிபாஸ் போன்ற மருந்துகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்துகள் அனைத்தும் எளிதில் கடைகளில் கிடைப்பதால் மக்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டவுடன் இதனை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.

எனவே இரு மாதங்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ளனர். இது குறித்த அரசாணையை வேளாண்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.