விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

0
120
ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court
ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

மேலும் அதேபோல சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது மூலம் நீர்நிலைகள் அசுத்தம் அடைகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்திற்கு என ஹிந்து அமைப்புகள் வசூலிக்கும் நன்கொடையை கண்காணிக்க வேண்டும் என் மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும் எனவும் இந்தியா அமைப்புகளை அறிவுறுத்துமாறு அரசு கூத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில்  மனுதாரர் தரப்பில் வழக்கறிஞரிடம் நன்கொடை வசூலிப்பவர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹிந்து  அமைப்புகள் என மனுதாரர்தரப்பில்  பதிலளிக்கப்பட்டது. மேலும்  அதனைத் தொடர்ந்து வழக்கில்  அந்த அமைப்புகளை எதிர் மனுதாரர் இணைத்து புதிய மனு தாக்கல் செய்த அறிவுறுத்திய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
Parthipan K