பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

0
72
Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!
Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ளனர்.

சேலத்திருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.

சேலத்திருந்து பெங்களூருக்கு 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.

சேலத்திருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என சேலம் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்.

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் திருநெல்வேலியிலிருந்து சென்னை போன்ற  தொலைதூரப் பயணங்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. தொலைதூர பயணங்களுக்கு பகல் நேரத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் பயணிகள் பயணங்கள் மேற்கொள்ள சிரமம் உள்ளதாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

author avatar
CineDesk