அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

0
75
Bail for Anbumani Ramadas? Court orders action!
Bail for Anbumani Ramadas? Court orders action!

அன்புமணி ராமதாசுக்கு பிடிவாரண்ட்? நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது 2013 ஆம் ஆண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கானது விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்தனர்.மேலும் இவ்வழக்கை  விழுப்புரம் மாவட்டம் எம்.பி,எம்எல்க்களை விசாரிக்கும் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்விசாரணைக்கு ஆஜரவாவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் அன்புமணி ராமதாசுக்கு விலக்கு அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த விலக்கின் உத்தரவானது குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு காலாவதியானது.மீண்டும் புத்துபித்த உத்தரவை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.அன்புமணி ராமதாசின் வழக்கறிஞர் சமர்பிக்காததால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது அன்புமணி ராமதாசுக்கு வெளியே வர முடியாத படி பிடிவாரண்ட் வழங்க நடுவர் அருண்குமார் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அன்புமணியின் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என் சதீஷ்குமார் முன்னிலையில் கடந்த 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி பேச்சுக்குறித்து வழக்கு பதிந்துள்ளதை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் அன்புமனிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நடுவர்  பத்தி என்பவர் உத்தரவிட்டார். இவ்வாறு நடந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட வழக்கில் அன்புமணி ஆஜரவாகவில்லை என்று நடுவர் எவ்வாறு கூறுவார்.மேலும் வெளியே வரமுடியாத படி பிடிவாரண்டை பிறப்பித்தது ஏன் என்று தெரியவில்லை என அன்புமணியின் வழக்கறிஞர்  கூறினார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஜம்புலிங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது,சென்னை உயர்நீதி மன்றத்தில் என்ன நடந்து என்று தெரியாது.அதுமட்டுமின்றி இவர் கூறியது போல எந்த உத்தரவு நகலும் இவ்வழக்கை நடத்தும் நடுவர் மன்றத்திற்கு கிடைக்கவில்லை என்றார்.