மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! 

0
107

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது!

மதுரவாயலில் பெண் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வேனின் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா வயது 22. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது தம்பி  முகப்பேரில் உள்ளதனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.  நேற்று ஷோபனா தனது தம்பியை பள்ளிக்கு டூவீலரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். தாம்பரம்- மதுரவாயில் பைபாஸ் மதுரவாயில் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் ஒன்று சோபனாவின் டூவீலரை முந்தி செல்லும்போது  டூவீலரின் மீது உரசியதால் குண்டும் குழியுமான சாலை காரணமாக நிலை தடுமாறிய சோபனா சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த மணல் லாரி ஒன்று அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சோபனா உயிரிழந்தார். அவரது தம்பி காயங்களுடன் உயிர்த்தப்பினார். சம்பவம் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் சென்று சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மோகன் பார்த்திபன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

விபத்து நடந்த சர்வீஸ் ரோடு மிகவும் மோசமான குண்டும் குழியுமான சாலையாக இருப்பதால் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தனர். சம்பவத்தன்று இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதும் தம்பியின் கண் முன்னே அக்கா விபத்தில் பலியானதும் அப்பகுதி  மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.