ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

0
88

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.

 ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த சீசன்களில் அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிஎல் தொடரில் இந்தியா தவிர மற்ற நாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆனால் அது ஐபிஎல் அளவுக்கு பிரபலம் ஆகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் எதிர்காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடும் நம்பிக்கை உள்ளதா என்று பாபரிடம் கேட்கப்பட்டது. “ஐபிஎல் விளையாடுவதன் நன்மைகளைப் பற்றி பேசுங்கள், அது உங்களுக்கும் உங்கள் அணிக்கும் உதவியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, எதிர்காலத்தில் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

பாபர் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அணியின் ஊடக மேலாளரிடம் திரும்பினார், அவர் பதிலளித்தார்: “நாங்கள் தற்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து கேள்விகளை மட்டுமே எதிர்கொள்கிறோம். ஐபிஎல் பற்றி அல்ல.” எனப் பதிலளித்தார்.