பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

0
319
#image_title

பாகுபலி பட நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகர்! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்!

உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் நோரா பதேஹி என்ற நடிகை நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஹிட்டான மனோகரி என்ற பாடலில் நடனமாடியவர்களில் இவரும் ஒருவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரோர் டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர்.

அதனை தொடர்ந்து பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நோரா பதேஹி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குத்துப் பாடல்களில் நடனமாடி வருகின்றார். இந்நிலையில் நடிகை நோரா பதேஹி படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் தனது முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பில் சக நடிகர்கள் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்றும் ஆத்திரத்தில் அவரை அறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது அந்த நடிகரும் பதிலுக்கு என்னை அறைந்தார் தன் தலைமுடியை பிடித்து இழுத்தார் ,நடிகையும் நடிகரின் தலைமுடியை பிடித்து இழுத்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு பெரிய சண்டையாக அது மாறிவிட்டது என தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Parthipan K