தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்!

0
84
தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்!
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நேரு சிலை அருகில் மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, ஆகியோர் முன்னிலையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட  போதைப் பொருள் தடுப்பு குறித்த மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்திலுள்ள 14 கல்லூரிகளைச் சார்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், 13 பள்ளிகளைச் சார்ந்த 7,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய்அலுவலர் தி.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி,தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் முதல்வர், மரு.பாலாஜிநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எம்.சக்கரவர்த்தி, தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்றத்தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.