நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!

0
83
Auto driver bathed in fire in the middle of the road! Excitement in Salem over vehicle test!
Auto driver bathed in fire in the middle of the road! Excitement in Salem over vehicle test!

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!

அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் வாகன  சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். கொண்டலாம்பட்டி அடுத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஒன்று வைத்துள்ளார்.அவ்வபோது அவரது ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாடகைக்கு செல்வது வழக்கம்.அதுமட்டுமின்றி சந்தோஷ் மதுவுக்கு அடிமையானவர் என்றும் கூறுகின்றனர்.

அவ்வாறு இவர் நேற்று இரவு ரவுண்டான வழியே ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த போலீசார் இவரை சோதனை செய்தனர். அவர் சோதனை செய்ததில் சந்தோஷ் மது போதையில் ஆட்டோ ஓட்டியது தெரியவந்தது. சந்தோஷ் மது அருந்திவிட்டு  ஆட்டோ ஓட்டியதற்கு  போலீசார் ரூ 10,000 அபராதம் போட்டுள்ளனர். மேலும் ஆட்டோவின் சாவியையும் போலீசார்  கொடுக்க மறுத்து உள்ளனர். போலீசார் அபராதம் கட்ட வேண்டும் என கூறியதாலும் சாவிக்கொடுக்க மறுத்ததாலும் மதுபோதையில் கோபமடைந்து சந்தோஷ் செய்வதறியாது பெட்ரோலை தன்மீது ஊற்றி கொண்டார்.

நடு ரோட்டிலேயே நொடி பொழுதில் தன் மீது தீ வைத்துக் கொண்டார். அங்கு வாகன சோதனையில் இருந்த போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர் மீது உள்ள தீயை அனைத்து  அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது சந்தோஷ் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதற்கு போலீசார் பைன் கட்ட சொன்னது தான் ஆட்டோ தராதது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட முறையில் காரணம் உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உயர் அதிகாரிகளும் இந்த வழக்கை தீவீரமாக விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.