ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் திடீர் மரணம்! கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்ட சோகம்!

0
61

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பின்னர் வர்ணனையாளராக பணியாற்றியவர் அத்துடன் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

52 வயது நிரம்பிய இவர், சுழற்பந்து ஜாம்பவானான இவர், தாய்லாந்திலிருக்கின்ற தன்னுடைய சொகுசு பங்களாவில் நேற்று பிணமாக கிடந்திருக்கிறார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மறுபடியும் துடிக்க வைப்பதற்காக மருத்துவர்கள் எடுத்த முயற்சிக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் பலியானதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அவருடைய மரணத்தை அவருடைய தனிப்பட்ட விவரங்களை நிர்வாகம் செய்து வரும் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது ஆனால் அவருடைய மரணத்திற்கான காரணம் என்னவென்பது தெரிவிக்கப்படவில்லை .அதோடு இந்த தருணத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. மரணமடைந்த வார்னேவுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

கடந்த 1992-ஆம் வருடம் சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் 2007ஆம் வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விடைபெற்றார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 145 டெஸ்ட் போட்டியில் விளையாடி 708 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

194 ஒருநாள் போட்டியில் விளையாடி 793 விக்கெட்டுகளையும், கைப்பற்றியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சார்ந்த சுழற்பந்துவீச்சாளர் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது இவர்தான் என்று சொல்லப்படுகிறது. 1999ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் இவருடைய முக்கிய பங்கு இருக்கிறது என தெரிவிக்கிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வரை தற்பெருமை அவருக்கு இருக்கிறது. கடந்த 2005-ஆம் வருடம் அவர் டெஸ்டில் 96 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரையில் ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமை அவரிடம் மட்டுமே இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் அவர் முத்திரையை பதித்திருக்கிறார். 2008ஆம் வருடம் இவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய சுழற்பந்து வீச்சு காரணமாக, 15 வருடகாலமாக எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த இவருடைய திடீர் மரணம் உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அவருடைய மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, உட்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், உட்பட முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்து வருகிறார்கள்.