5000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு ! பதறும் விலங்குகள் ஆர்வலர்கள் !

0
155

5000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு ! பதறும் விலங்குகள் ஆர்வலர்கள் !

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சம் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் 5000 ஒட்டகங்களை சுட்டுத்தள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையானத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் உருவானக் காட்டு தீயை அணைக்க ஏராளமான தண்ணீர் செலவிடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த கொடூர காட்டுதீயால் பல விலங்குகள், பறவைகள் அழிந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம் தான் எனினும் இம்முறை அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்போது இந்த சூழ்நிலை மேலும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஃபேரல் எனும் வகை ஒட்டகங்கள் ஏராளமான தண்ணீரை குடிக்கும் வழக்கம் உடையவை.  தண்ணீர் பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த வகை ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசின் இந்த கொடூர முடிவுக்கு விலங்குகள் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ அந்த ஓட்டகங்களை சோமாலியா போன்ற உணவுப்பஞ்சத்தில் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பியிருந்தால் அவர்களாவது பயன்பட்டு இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசமானக் காட்டுத் தீக்கு வேகமாக மாறி வரும் தட்ப வெப்ப நிலை மாற்றமே காரணம் என சொல்லப்படுகிறது. அதை சரிசெய்யாமல் இப்படி விலங்குகளைக் கொல்வது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

author avatar
Parthipan K