இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
69

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை அறிக்கை இருக்கிறது. அதோடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வளிமண்டலத்தின் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதால் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. விழுப்புரம் ,கடலூர், புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறையில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஓட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனை தவிர்த்து இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரையில் கேரள மாநில கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், அதாவது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காற்று வீச படலாம் என்ற காரணத்தால், அந்தப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.