மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

0
112
Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!
Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.அப்போது அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து தீர்பளித்து.அதனையடுத்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு மேல்முறையீடு செய்து கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உச்சநீதிமன்றம் பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.அந்த  வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதா உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும் முன்னதே ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தார்.அதனால் சசிகலா உட்பட மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்களுக்கான தண்டனை காலம் நிறைவடைந்தது.இந்நிலையில் சமூக ஆர்வலரான நரசிம்மமூர்த்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.அதனால் அந்த பொருட்களின் நிறம் மங்கி கிழிந்துபோகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக 11,344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் மற்றும் 250 சால்வைகள் இருகின்றது.

அதனால் அவற்றை அனைத்தையும் ஏலம் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.அந்த கடிதத்தின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு அந்த நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிய சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு அந்த கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த கடிதத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை என்றும் அவர் மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி அதில் தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.அந்த கடிதத்தின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

author avatar
Parthipan K