Uncategorized
முதல்வரின் மாவட்டத்திலே சொந்த கட்சி எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட சோகம்! கலக்கத்தில் முதலமைச்சர்!

ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த சின்னத்தம்பி இருந்து வருகின்றார். இவர் கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட நாள் முதலே, அவர் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளிலே கொரோனா தடுப்பு பணி, மற்றும் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு போன்றவற்றில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு உண்டானது. இதனையடுத்து ஆத்தூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் சின்னத்தம்பி.