வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!

0
149
Attention Vehicle Registration Number Shop Owners! If you do this, the police issued a warning!
Attention Vehicle Registration Number Shop Owners! If you do this, the police issued a warning!

வாகன பதிவு எண்  தயாரிக்கும் கடை உரிமையாளர்களின் கவனத்திற்கு! இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை!

மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதற்கான  அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை நகர காவல் துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு புதிய வாகன அபராத தொகை வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம்  திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து. மேலும் பெரும்பாலானோர்  பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில்  விதவிதமான நம்பர் பிளேட்டுக்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி  நம்பர் பிளேட்டுகளில் நம்பர்களை சாதாரணமாக எழுதாமல் வித்தியாசமான முறையில் எழுதி வருகின்றனர்.

சென்னையில் சாலை விபத்துக்கள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாகனங்களிலும் வாகன பதிவு எண்  பலகை சரியாக உள்ளதா என ஒவ்வொரு வாரமும்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விதிமுறைகளை மீறி பதிவெண் பலகை  வைத்திருக்கும் வாகன ஓட்டி உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டம் விதிகள் 50 மற்றும் 51-ன் படி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த விதிமீறல் பதிவு எண் பலகை உள்ள வாகனங்களை கண்டறியும் வகையில் பொது இடங்களில் உள்ள வாகன நிற்கும் இடங்கள், தனியார் வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த 25ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது, இதில் விதிமுறைகளை மீறி பதிவின் பலகை பொருத்தி இருந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விதிமுறைகளை மீறி பதிவெண்  பலங்களை தயாரித்து வரும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்து சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் கபில்குமார் சி சரத்கர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை, ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள 138 வாகன பதிவின் பலகை எழுதும் கடைகள், ஸ்டிக்கர் கடைகள் வாகன உதிரிபாகங்கள் இருக்கும் கடைகள் ஆகியவற்றுக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர், வாகன சட்டத்தில் கூறியுள்ளபடி வாகனங்களின் பதிவெண்  பலகைகள் தயார் செய்து பொருத்த வேண்டும் என அறிவித்தனர்.  வாகன பதிவெண் பலகை பொருத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K