வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !!

0
78
Shocking news for the public! Sudden increase in fees from January 1 !!
Shocking news for the public! Sudden increase in fees from January 1 !!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !!

பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் பொதுவாக பேருந்து கட்டணம் உயர்வது வழக்கமான ஒன்று. அந்த நிலையில் தற்போது ஆம்னி பஸ்களில் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு கவலை அளித்துள்ளது.

பல்வேறு ஊர்களில் பணிநிமித்தம் காரணமாக பணி புரியும் மக்கள் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமான ஒன்று. தொலைதூர பயணத்திற்கு மக்கள் பெரும்பாலும் ரயில் மற்றும் ஆம்னி பேருந்து பயணத்தையே தேர்ந்து எடுப்பார். குறித்த காலத்தில் செல்வதற்கு அது தான் வசதியான ஒன்றாக இருக்கும்.

விடுமுறைக்கு சில நாட்கள் அல்லது சில மாதங்களுக்கு முன்னரே பேருந்து அல்லது ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் கிருஸ்துமஸ், வருட பிறப்பு  மற்றும் பொங்கலுக்கு இந்த ஆண்டும் தொடர் விடுமுறை விடப்படுவதால் மக்கள் சொந்த ஊருக்கு  சென்றுள்ளனர்.

அதனையடுத்து கிருஸ்துமஸ் முடிந்து மீண்டும் பணிக்கு திரும்ப ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய இருந்தவர்களுக்கு திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வழக்கமாக உள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900, கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.3000, நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.3500 – 4500 வரை, திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.2500 என கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வாறு திடீரென கட்டண உயர்வு மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.