மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்! 

0
141
Attention students! Chennai University Distance Education Exam Result Released Today!
Attention students! Chennai University Distance Education Exam Result Released Today!

மாணவர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள்!

கடந்த 1980-81 ல் கல்வியாண்டில் சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.மேலும் அந்த தேர்வு குறித்து விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.மேலும் தமிழகத்தில் தற்போது தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தற்போது அதிகளவு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலை நிலைக்கு கல்வியில் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 2022 ஆம் நடந்த சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வியின் இளநிலை,முதுநிலை மற்றும் எம்பிஏ முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளை தேர்வர்கள் http://www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலமாக முடிவுகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் சென்னை பல்கலைகழகம் 1980 -1981 ஆம் கல்வியாண்டில் தொலைநிலை கல்வியியல் பயின்றவர்களின் நிலுவையில் உள்ள தேர்வுகளை எழுத மறுவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தொலைநிலைக் கல்வி திட்ட இணையதளத்தில் நிலுவைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன் மூலமாக தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K