8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

0
70

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு நேற்று 100
இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் விவசாய நிலத்தில் மண் பானையில் பொங்கலிட்டும் மடிப்பிச்சை கேட்டும் போராட்டம் நடத்தினர். இதில் திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேத்துப்பட்டு அடுத்த பெலாசூர் கிராமத்தில் பொதுமக்கள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர்.இதில் வழக்கறிஞர் பாசறை பாபு உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சுதந்திர தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் 8 வழிச்சாலைத் திட்டம் வேண்டாம் என தீர்மானம் கொண்டு வர ஊராட்சி மன்றத் தலைவர்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

author avatar
CineDesk