மக்களே உஷார்:! மீறினால் 5000 ரூபாய் அபராதம்!

0
68

மக்களே உஷார்:! மீறினால் 5,000 ரூபாய் அபராதம்!

 

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 8-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும்,ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து,செப்டம்பர் 8 தேதியன்று தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்,40% மக்கள் அலட்சியமாக இருப்பதினால் தான் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரிக்கின்றது என்று கூறிய முதல்வர்,விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநரிடம் தமிழக முதல்வர் ஒப்புதல் கோரியிருந்தார்.இந்த அவசர சட்டத்திற்கு,ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய சட்டத் திருத்தம் தொடர்பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி யார் யாரிடம் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

1.முக கவசம் அணியாதவர்களுக்கும்,தனிமை படுத்தும் உத்தரவை மீறும் நபர்களுக்கும் ரூ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

2. பொது இடங்களில் எச்சில் துப்புவர்கள் மீதும்,முறையான சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

3.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் தனிநபர்கள் மீது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

4.விதிகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகனங்கள் மீது ரூ 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

5.அரசு விதிகளை மீறும் உடற்பயிற்சி நிலையங்கள் போன்ற வர்த்தக நிறுவனங்கள் மீது,ரூ 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்த அபராதங்கள் அனைத்தும்,அவசர சட்ட விதிகளின்படி விதிக்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் யாரெல்லாம் அபராதம் விதிக்கலாம்!

அவசர சட்டம் தொடர்பாகவும் அபராதம் விதிப்பது மற்றும் இதை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.அதில் குறிப்பிட்ட உள்ளதவாறு:

வருவாய் துறை ஆய்வாளர்கள்,சுகாதார துறை ஆய்வாளர்கள்,காவல்துறை உதவி ஆய்வாளர்கள்,போன்றவர்கள் அபராதம் விதிக்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ்தான் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra