மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
101
சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு முன்னேற்ற பாதைகள் அதிகரித்து நிற்கும் நாள். இன்று சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள் அதன் மூலம் உங்கள் முன்னேற்றம் அருமையாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும் குடும்ப உறவு பலமாக உள்ளது கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பம் ஒற்றுமையாக செயல்படும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வெளியூர் பயணங்கள் சர்வ சாதாரணமாக அமையும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று தடை தாமதத்திற்குப் பிறகு நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அருமையாக முடிகிறது என்ற சந்தோஷத்தில் இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

மக்களே எச்சரிக்கை.. உலககோப்பை என்ற பெயரில் 50 ஜிபி இலவச டேட்டா! சைபர்கிரைம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சமீப காலமாக மக்களின் செல் போன் எண்ணிற்கு கடன் தருகிறோம் என்று குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் நமது செல்போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் திருடி விடுகின்றனர். இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். மேலும் உங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் இப்படிப்பட்ட லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அவ்வபோது காவல் துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகை காலம் வரும் பொழுதும் டி-மார்ட் மற்றும் இதர தனியார் நிறுவனங்கள் சலுகை தருவது போல முகப்பு வைத்து லிங்க் அனுப்புகின்றனர். இந்த லிங்கை இருவது பேருக்கு பகிர்ந்தால் = உங்களுக்கு அந்த சலுகை கிடைக்கும் என்று மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால் அவ்வாறான சலுகைகள் ஏதும் அந்நிறுவனங்கள் வழங்கவில்லை.

இது அனைத்தும் டேட்டாக்களை திருடுவதற்காக அனுப்பப்படும் பொய்யான செயலி. அதேபோல தற்பொழுது உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்வைத்து, இலவச டேட்டா கொடுப்பதாக அனைவருக்கும் ஒரு லிங்க் ஷேர் செய்யப்பட்டது. இரு தினங்களாக இது குறித்த லிங்க் ஆனது அனைவரின் செல்போன் எண்ணிற்கும் அதிக அளவில் அனுப்பிவந்தனர். இவ்வாறு 50 ஜிபி டேட்டா கொடுப்பதாக கூறிவரும் லிங்க் பொய் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அந்த லிங்கை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.