அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

0
82
Attention of government doctors! Strict action if these rules are violated!
Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது.அந்த பிரசவத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மருத்துவர்கள் தற்போது இருக்கும் நடைமுறைப்படி காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை மட்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மருத்துவர்கள் இன்றி செவிலியர்கள் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் வரையறுக்கப்பட்ட நேரத்தில் மருத்துவர்கள் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் எனவும் அந்த விதிகளை மீறி பணியைப் புறக்கணிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K