வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

0
158
Attention motorists! Will this document be canceled if helmet is not worn?
Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அந்த பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட தவறினால் 10,000 அபராதம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட தவறினால் ரூ. 10,000 அபராதம் வழங்க வேண்டும். தேவையற்ற இடத்தில் ஒழிப்பானை இயக்கி சத்தம் எழுப்பினால் ரூ 1000 அபராதம் வழங்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என முன்னதாகவே சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்குவதால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது.

அதனால் காவல் துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சாலை விதிகளை மதிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு  தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் நெல்லையில் தலைகவசம் அணியாமலும், செல்போனில் பேசிக்கொண்டே இரு சக்கர வாகனம் காரணத்திற்காக ஒரு பெண்ணின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K