பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!

0
147

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!

நமது வீட்டில் சமையல் அறையில் நாம் தினந்தோறும் இந்த தவறை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி ஒரு சிலர் கழுவுவது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல். அரிசி என்பது அன்னபூரணியின் மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவ வேண்டும் அப்போது தான் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

குடும்பத்தில் செல்வ செழிப்பு நிலைத்திருக்கும். இந்தக் குடும்ப பெண்ணானவள் மிகுந்த பொறுப்புடனும் நற்குணங்கள் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். அரிசியை கழுவும் பொழுது பெண்கள் பொறுப்புணர்வு குறைந்தவர்களாக நம் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

சாதம் செய்வதற்காக ஊறவைத்த அரிசியை மறந்து கூட சாப்பிட கூடாது. அரிசியை எப்பொழுதும் சிந்தாமல் இருக்கும் குடும்பத்தில் அன்னபூரணி பரிபூரணமாக நிறைந்து இருப்பாள் என்பது ஐதீகம்.

 

author avatar
Parthipan K