குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

0
98

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கிட்டத்தட்ட 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.மேலும் இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. தேர்வர்கள் அந்த விடைகளை சரிபார்த்து, தங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என தெரிந்துக்கொண்டனர். இதேபோல் நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் சற்று குறையாலாம் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த குரூப் 4 தேர்வுகளின்போது, முதலில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட நிரப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, இந்த ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாமல் உள்ளதாலும், மேலும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நிச்சயமாக இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என குரூப் தேர்வுகளை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்ததாக இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் கடந்த முறை தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட எடுத்துக் கொண்ட கால அளவைக் கணக்கிடும்போது, அக்டோபர் 2 ஆவது வாரத்திலேயே முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 162 க்கும் மேலும், பி சி பிரிவினருக்கு 157 க்கும் , எம் பி சி பிரிவினருக்கு 155க்கு , எஸ் சி பிரிவினருக்கு 151க்கு , பி சி எம் பிரிவினருக்கு 146க்கு , எஸ் சி ஏ பிரிவினருக்கு 144க்கு , எஸ் டி பிரிவினருக்கு 137 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் மாற்று திறனாளிகளுக்கு 140 ல்லிருந்து 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130 ல்லிருந்து140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம். அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிடுகிறோம் என்றும் கூறப்பட்டிருந்தது.

 

 

author avatar
Parthipan K