கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

0
217

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை என அனைத்து வேலைகளிலும் உள்ளவர்கள் கூட இந்த திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இவர்கள் தொழிலாளர் உதவி அலுவலகத்திற்கு சென்று இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சியானது தையூரில் கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்தில் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தங்குமிடம் உணவு என அனைத்தும் இலவசம் எனக் கூறியுள்ளது. பயிற்சி அளிப்பதுடன் இவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழி செய்கின்றனர். மேலும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் மூன்று ஆண்டுகள் ஆவது உறுப்பினராக இருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர். மேலும் உறுப்பினராக இருப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் எழுத படித்திருக்க தெரிய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.