சட்டசபையில் நடைபெற்ற காரசார விவாதம்! ஒரே கேள்வியில் முதல்வரை வீழ்த்திய எதிர்க்கட்சித்தலைவர்!

0
92

திமுகவைப் பொறுத்தவரையில் எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று மக்களை இழிவுபடுத்துவதை அந்த கட்சி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

பல மேடை நிகழ்ச்சிகளில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

அதோடு இந்துமத கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் பேசியிருக்கின்றன என்பதுதான் கடந்த கால வரலாறு.

விளக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல என்ற ரீதியில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உரையாற்றி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவை அனைத்தும் சிறுபான்மையினரின் மக்களுக்காக வேண்டுமென்றே ஒரு தேர்தல் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

இதுவே தற்போதைய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அது போன்ற சிறுபான்மையினர் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அந்த கட்சியிலிருக்கின்ற தலைவர்கள் மேடையில் பேசும் விதம் வேறுமாதிரியாக இருக்கிறது.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் சிறுபான்மையினர் தொடர்பாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் எந்த இடத்திலும் எந்த விதத்திலும் சிறுபான்மையினரை உயர்த்திப் பேசினாலும், இந்துமத நம்பிக்கைகளையும், இந்துமத கடவுள்களையும், கொச்சைப்படுத்தும் விதமாக பேசவில்லை என்பதும், எந்த மதத்தினரையும் இழிவுபடுத்தவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

அதோடு அந்த நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மதத்தினருக்கும் அவரவர் மதத்தின் சுதந்திரம் இருக்கிறது. எந்த மதத்தையும் யாரும் குறை சொல்ல முடியாது, குறை சொல்லக்கூடாது, என்று ஆணித்தனமாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து அதிமுக சட்டசபை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் உரையாற்றினார்.

அப்போது இந்து சமய அறநிலையத் துறை மற்ற துறைகளை விட முக்கியமானது சிறப்பு வாய்ந்த இந்த துறை புனிதமான துறை என தெரிவித்திருக்கிறார். அதோடு 1959 ஆம் வருடம் இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் அடிப்படையில் இந்த துறை ஏற்படுத்தப்பட்டது. செயல்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு மேலும் பேசிய அவர் அதிமுக ஆட்சி காலம் தான் இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் ஆகும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மிக நம்பிக்கை கொண்டிருந்ததால் இந்த துறையில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தார் என தெரிவித்தார்.

பசிப் பிணியை போக்கும் விதமாக திருக்கோவில்களில் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தா.ர் 2002ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் அதன்பிறகு விரிவுபடுத்தப்பட்டது.

பொதுவாக அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவீரர்கள் அல்லது ரத்து செய்வீர்களானால் அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்ற பத்து வருட கால அதிமுக ஆட்சி காலத்தில் 11 ஆயிரம் திருக்கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படுகிறது கோவில் திருப்பணிகளுக்கு 25,000 வழங்கப்பட்டது . இதனை 50,000 என உயர்த்தியும், அதோடு 1 லட்சம் என்று உயர்த்தியும், வழங்கியது அதிமுகவின் ஆட்சி காலத்தில்தான் என்று அவர் பேசினார்.

அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டு உரையாற்றினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு-

அவை முன்னவர் துரைமுருகன் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் மாற்றியதாக உறுப்பினர் தெரிவிக்கிறார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் அதிமுக ஆட்சியில் மாற்றியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதன் பிறகு பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபை உறுப்பினர்2 முறை இந்த அரசுக்கு நன்றி தெரிவித்தார். அவர் பேசி முடிப்பதற்கு முன் 10 முறையாவது நன்றி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

கோவில் திருப்பணிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு கோவில்களுக்கும் 1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் குறிப்பிட்டார். அது தற்சமயம் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் தற்சமயம் இந்த நிதி 1250 கோவில்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய கட்சியின் உறுப்பினர் கருத்தை பதிவு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது.

கோவில் திருப்பணிகளுக்கு வழங்கும் தொகை தற்சமயம் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்கள். தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்திருக்கிறது.

ஆகவே 2 லட்சமாக உயர்த்தப்படும் இருந்தாலும் கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 1 லட்சத்திற்கு தான் அது சமம் என தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு கோவில் திருப்பணிகளுக்கு நீங்கள் 1 லட்சம் வழங்கியபோது கம்பியின் விலை 20 ஆயிரமாக இருந்தது. அதன் பிறகு அந்த விலை 40 ஆயிரமாக அதிகரித்த போது நீங்கள் 1 லட்சத்தை தான் வழங்கினீர்கள் என தெரிவித்தார்.

அந்த சமயத்தில் இது தொடர்பாக உரையாற்றிய நத்தம் விஸ்வநாதன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கும் நிதி யானை பசிக்கு சோள பொரியா கடலில் கரைந்த பெருங்காயம் போல இருக்கிறது.

ஆகவே இந்த தொகையை 5 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும், கோவில்களிலுள்ள திருக்குளம் பணிகளையும், திருத்தேர் பணிகளையும், செய்தது அதிமுக அரசுதான் அதை நீங்களும் தொடர்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், மதச்சார்பற்ற அரசாக இருக்க வேண்டும். அனைத்து மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். முதலமைச்சர் கடவுள் இல்லை என்று மறுப்பவரா? என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அது ஒவ்வொருவரின் சொந்த விருப்பம் என்று கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நத்தம் விஸ்வநாதன் முதலமைச்சர் ஆன்மீகவாதியா?என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் இந்துக்களால் நேசிக்கப்படும் தலைவராக அவர் இருக்கிறார். மடாதிபதி தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலமைச்சரை சந்தித்து பேசினார்கள்.

அதன் பிறகு அவர்கள் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அனைத்து மதத்திற்கும் சொந்தக்காரர் உங்களுடைய சொந்த கருத்தை நீங்கள் கேட்கிறீர்கள் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக உறுப்பினர் இங்கே முதல்வர் விளக்கம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கிறார். எங்கள் கூட்டணியின் பெயரே மதச்சார்பற்ற கூட்டணி தான் என பேசினார். இதனை தொடர்ந்து பேசிய அதிமுகவைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் அதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு தனிப்பட்ட ஒருவருடைய விருப்பத்தை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. எம்மதமும் சம்மதம் என்று முதலமைச்சர் செயல்படுகிறார்.

இதுவரையில் இந்துக்களை பற்றி எந்த கருத்தையும் தவறாக சொல்லவில்லை மதத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் போல உங்கள் பேச்சு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அவை குறிப்பில் இருந்து அது நீக்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு ஒரு அரசின் கொள்கை முடிவை தெளிவாக குறிப்பிட்டு பேசினார். அதன் பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் மதங்களுக்கு எதிராக பேசவில்லை முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் அனைத்து மதங்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் ஏன் தீபாவளி பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய அதிமுக சட்டசபை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது நடைமுறையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் என்று திட்டமிட்டே ஒரு சிலர் திமுகவை ஆன்மீகத்திற்கு எதிராக இருப்பதை போல காட்ட முயற்சி செய்கிறார்கள்.

இது பெரியார் ஆட்சி அண்ணா ஆட்சி தலைவர் கலைஞர் ஆட்சி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் திராவிட மாடல் ஆட்சி யாருக்கும் நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் விவாதம் எதையோ நோக்கி செல்கிறது. பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தெரிவித்தார், ஆகவே எம்மதமும் சம்மதம் என தெரிவித்தார். இவ்வாறு சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.