கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு

0
170
#image_title
கென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு.
உலக மக்கள் அணைவரிடமும் அன்று முதல் இன்று வரை மூடநம்பிக்கை என்ற பழக்கம் தொன்று தொட்டு வருகிறது‌. அதிலும் குறிப்பாக இறை நம்பிக்கையில் கண்மூடிதனமான பல மூட நம்பிக்கைகளை பின்பற்றி தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.
உலகில் உள்ள பல நாடுகளில் இன்றும் கல்வியறிவு, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் பின்தங்கிய நாடுகள் எத்தனையோ உள்ளன, அவைகளில் குறிப்பிட்ட சில நாடுகளில் மூட பழக்க வழக்கங்கள், அதீத இறை நம்பிக்கை இவைகளை பயன்படுத்தி அப்பாவி பொது மக்களின் உயிர்களையும், பொருளாதாரத்தையும் கடவுளின் பெயரை கூறி சுரண்டுவதற்கு ஒரு கூட்டமே உண்டு.
அவ்வாறு உள்ள ஒரு நாடுதான் கென்யா. இந்த நாட்டில் சமிபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் உலக மக்கள் அணைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டில் உள்ள கடற்கரை நகரமான மெலிந்தி எனப்படும் பகுதியில் கடவுளை காண்பிப்பதாக கூறி மத போதகர் மெக்கின்ஸி என்பவர்,  40 நபர்களை பட்டிணி இருக்க வைத்து மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கென்யா நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிந்திகி கூறும்போது, அந்த மத போகதர் அருகில் உள்ள 3 கிராமங்களுக்கு நாசரேத், பெத்லஹேம், ஜூதேயா என்று பெயரிட்டதாகவும், தன்னைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்பு குளங்களில் ஞானஸ்நானம் கொடுத்ததாகவும் கூறப்படுவதாகவும், மத போதகரின் பேச்சைக் கேட்டு, கடவுளைப் பார்க்கும் ஆசையில் அவர்கள் நோன்பிருந்து உயிர் நீத்ததாக கூறப்படுவது குறித்தும் கென்யா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
மத அடிப்படைவாதம் நிறைந்த கென்யாவில் இதுபோன்ற ஆபத்தான, அரசால் ஒழுங்குபடுத்தப்படாத அல்லது தன்னையே கடவுளாக வழிபடச் செய்யும் போதகர்களால் மக்கள் ஈர்க்கப்பட்டதற்கு ஆதாரமாக ஏற்கனவே பல நிகழ்வுகள் உள்ளன. எனவே பொதுமக்கள் தங்களை தாங்கள் தான் காப்பாறாறி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.