தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

0
84
Athletic age? Someone dare Grandma !!
Athletic age? Someone dare Grandma !!

தள்ளாடும் வயதில் தடகளமா? பாட்டிக்கு எவளோ தைரியம்!!

குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 105 வயதான மூதாட்டி கலந்து கொண்டார்.85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் எந்த ஒரு பயமும் இல்லாமல் தனிஒருவராக கலந்து கொண்டவர் ராம்பாய் .

போட்டி ஆரம்பித்ததும் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதுவும் இந்த தள்ளாடும் 105 வயதில் எவராலும் நம்பமுடியாத சாதனையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் 200 மீட்டர் தடகள ஓட்டத்திலும் பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தி சாதனையாளர் என்ற பெயரையும் பெற்றார்.

பின்னர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு பதக்கமும் கோப்பையும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.அதில் பேசிய மூதாட்டி ராம்பாய்,எனக்கு இது ஒரு பெரிய உணர்வையும் புத்துணர்ச்சியும் அளிப்பதாக கூறினார்.நான் மறுபடியும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறினார். இந்தப் பந்தயத்தின் நட்சத்திர மூதாட்டி வீராங்கனையான இவரை மூதாட்டி உசைன் போல்ட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

105 வயதிலும் தன் இளமையின் ரகசியத்தை பற்றி ராம்பாய் சொல்லும்போது உடல் சிலிர்த்து போனது அவர் நாளொன்றுக்கு 250 கிராம் நெய், 500 கிராம் தயிர், அரைலிட்டர் சுத்தமான பால் ஒரு நாளைக்கு இருமுறை இதான் இவரது உணவாம்.நான் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவதில்லை என்றார் மூதாட்டி .இதைதொடர்ந்து மூதாட்டியை சுற்றி புகைப்படம் எடுத்து மக்கள் அவரை உற்சாகபடுத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K