திருமணம் நடக்காத விரக்தியால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்! கடலூரில் வெறிச்செயல்!

0
76

தற்போதுள்ள சூழ்நிலையில் 2000களில் பிறந்த குழந்தைகளுக்கு கூட திருமணம் மிக எளிதில் நடைபெற்று விடுகிறது. ஆனால் 90களில் பிறந்தவர்களுக்கு 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் திருமணம் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது.

இதற்க்கு பெண் கிடைக்காதது தான் முக்கிய காரணம் என்றாலும் கூட அவர்களின் பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறும் இதில் அடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்,

இன்னும் சொல்லப்போனால் 90களில் பிறந்தவர்களுக்கு பெரிய அளவில் சொல்லும்படியாக அசையும், அசையா, சொத்துக்கள் எதுவும் இருப்பதில்லை. காரணம் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை 90-களில் பிறந்தவர்களின் தாய், தந்தை அனைவரும் பெரிய அளவில் தன்னுடைய குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் திருமண வயதை எட்டி விட்டாலும் கூட, கடனிருக்கிறது, சொத்துக்களை சேர்க்க வேண்டும், என்று பல காரணங்களை தெரிவித்து அவர்களை உழைப்பதற்காக அயல் நாட்டிற்கோ, அல்லது வெளியூருக்கு அனுப்பி விடுகிறார்கள். அவர்களும் கடன் இருக்கிறது என்று வயது முதிர்வை கூட தெரியாமல் எப்போதும் வேலை, வேலை, என்று, இருந்து விடுகிறார்கள்.

திரும்பிப் பார்த்தால் 2000களில் பிறந்த நபர்களுக்கு கூட திருமணமாகி விடுகிறது ஆனால் 90களில் பிறந்த பலருக்கு திருமணம் என்பது கனவாகவே போய்விடுகிறது.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி இவருடைய மகன் ஜான்சன் இவருக்கு 39 வயதான நிலையில் தனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று அடிக்கடி வீட்டிலுள்ளவர்களிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த 7ஆம் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தது லூர்துசாமியிடம் ஜான்சன் விவாதம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, இருவருக்குமிடையே வாய்த்தகராறு உண்டானது இதில் ஆத்திரம் கொண்ட ஜான்சன் கட்டையால் லூர்துசாமியை அடித்து கீழே தள்ளி விட்டார் என சொல்லப்படுகிறது.

இந்த தகராறில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து லூர்துசாமியின் இளைய மகனான ஜான் பிரிட்டோ வழங்கிய புகாரினடிப்படையில், சோழத்தரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை வலைவீசி தேடி வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.