இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்!

0
139

மேஷம்

இன்று தங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள், எப்படியாவது முடிந்து விடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போவதற்கான வாய்ப்புண்டு, உத்தியோகத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் நாள், தொழில் வளர்ச்சி ஏற்படும், குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், வியாபார விரோதம் அதிகமாகும், நண்பர்கள் நம்பிக்கையான விதத்தில் நடந்து கொள்வார்களா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கும், இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் நற்காரியம் நடைபெறும் நாள், தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம், பயணம் எதிர்பார்த்த பலன்களை கொடுக்கும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சிம்மம்

இன்று தங்களுடைய உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள், தெய்வ பலம் மிக்கவர்கள் உங்களுக்கு பெண்மணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள், எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு நூதன பொருள் சேர்க்கை ஏற்படும் நாள், கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் அரைகுறையாக நின்ற வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள், உடல் நலனில் உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும்.

துலாம்

இன்று தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள், உத்தியோகம் தொடர்பாக மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம், மிக நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனை ஒன்று நல்லதொரு முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்சி கைக்கூடும்.

தனுசு

இன்று தாங்கள் அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள், அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும், பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும், உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான தகவல் வரலாம்.

மகரம்

இன்று தங்களுக்கு பெருமை சேரும் நாள், மற்றவர்கள் பாராட்டும் படியான செயல் ஒன்றை செய்து காட்டுவீர்கள், பாக்கிகள் வசூலாகும் வருமானம் திருப்திகரமாக இருக்கும் வாரிசுகளின் திருமணம் முயற்சி வெற்றி பெறும்.

கும்பம்

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக ஒரு நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் நலனில் அக்கரை காட்டுவீர்கள், வாகனம் மற்றும் தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும், பஞ்சாயத்துக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும்.

மீனம்

இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்து இணையும் நாள், வீடு மாற்றம் உறுதியாகலாம், நிலையான வருமானத்திற்கு வழி வகுத்துக் கொள்வீர்கள், கிளை தொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.