இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்!

0
121

மேஷம்

இன்று தங்களது யோகாவினால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து நின்றார்கள் தொழிலில் பங்குதாரர்கள் காரணமாக லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு நிதிநிலை அதிகரிக்கும் நாள், தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் அதிகரிக்கும், வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் நற்காரியங்கள் நடைபெறும் நாள், ஆதாயம் கொடுக்கும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள், தொழில் வளர்ச்சி ஏற்படும், உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமையாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள், சொத்து விற்பனை காரணமாக. லாபம் வரும் உத்தியோக முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சி பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய எதிரிகள் உதிரிகளாகும் நாள் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தாரின் பகை நீங்கும், ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

கன்னி

இன்று தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடித்து நிம்மதி காணும் நாள், வாரிசுகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பாதியில் நின்ற கட்டிடப் பணியை மீண்டும் ஆரம்பிப்பீர்கள்.

துலாம்

இன்று தாங்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள், மறதியால் சில வேலைகளில் தாமதம் உண்டாகும். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள், உத்தியோகத்தில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், பொருளாதார நிலை உயரும், தொழிலில் புதிய பணியாளர்களை இணைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

தனுசு

இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும் நாள், பணவரவு தாராளமாக இருக்கும், ஆற்றல் மிக்கவர்கள் தங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், ஆரோக்கியம் சீராகும், திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு செலவுகள் குறைய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள், பொதுநலத்தில் ஆர்வம் அதிகரிக்கும், பயணம் பலன் கொடுக்கும், மாற்றினத்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு லாபகரமான நாள், விரும்பிய நேரத்தில் விரும்பிய வேலையை செய்து முடிப்பீர்கள். வீட்டுததேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும், உத்தியோகத்தில் உயர் நிலையை அடைய சந்தர்ப்பம் கைகூடிவரும்.